காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான கொள்கை இடைவெளிகள் மற்றும் தேவைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கான பிராந்திய பட்டறை.

கொழும்பு 19 ஆம் திகதி புரட்டாதி  ,2019


புரட்டாதி மாதம்  17  மற்றும் 18 ஆம் திகதிகளில் , மகாவலி அபிவிருத்தி  மற்றும் சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்ற செயலகம், ஸ்லைகன் அறக்கட்டளை (SLYCAN Trust)  , பிரகிரிதி வள மையம், ஐ.சி.சி. சி எ.டி மற்றும் உலகளாவிய மாற்ற ஆராய்ச்சிக்கான ஆசிய-பசிபிக் வலையமைப்பு ஒன்றிணைந்து காலிமுக ஹோட்டலில் (Galle Face Hotel) இரண்டு நாள் பிராந்திய பங்குதாரர் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.  தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) செயல்படுத்துவதில் கொள்கை இடைவெளிகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வதில் இந்த பட்டறை ஆனது கவனம் செலுத்தியிருந்தது. மேலும் என்.டி.சி க்கள் (NDCs) , தேசிய தழுவல் திட்ட (NAP) செயல்முறைகள், நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDGs) மற்றும் அனர்த்த அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு (Sendai Framework) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது. 

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும், நிலையான அபிவிருத்தியை     அடைவதற்கும் என்.டி.சி களின் (NDCs) முக்கியத்துவம் குறித்து பேசிய மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. அனுரா திசாநாயக்க,( Mr. Anura Dissanayake), 

[மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. அனுரா திசாநாயக்க]

“அபிவிருத்திக்கான முன்னுரிமைத் துறைகள் மற்றும் பொதுவான காலநிலை தாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பிராந்திய நாடுகளிடையே பலதரப்பு நடவடிக்கைகளை வளர்ப்பதற்கான வழிகளை என்.டி.சி க்கள் (NDCs) வழங்கக்கூடும் என்றும்   பிராந்திய ஆராய்ச்சி மற்றும் அறிவு பகிர்வு தளங்களும் இந்த நுழைவு கருத்துக்களை  அடையாளம் காண உதவுகின்றன, அங்கே காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை எதிர்த்துப் போராட நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் கூறிய போது  காலநிலை மாற்றம் தொடர்பிலான    தாக்கங்கள் தனியன் அல்ல இது கூட்டு மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்களையும் கொண்டுள்ளன என்பதை எடுத்துரைத்த அதேவேளையில் "காலநிலை மாற்றம் இலங்கை மக்கள் பலரின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் போன்ற முக்கிய பொருளாதார துறைகளை பாதிக்கும் மழையின் மாற்றமே முக்கிய தாக்கமாகும். இது விவசாயத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டுக்கொடுக்க அல்லது முடிந்தவரை விலகிச் செல்ல மக்களை கட்டாயப்படுத்துகிறது. உலர் வலயத்தில் , 1,250 மாணவர்களைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட பாடசாலைகள்   உள்ளன, ஆனால் உண்மையில், மாணவர்களின் எண்ணிக்கை 250 ஆகக் குறைந்துள்ளது. காலநிலை மாற்ற தாக்கங்கள் கல்வியையும் அணுகுவதற்கான சவால்களை உருவாக்கியுள்ளன, ”என்று அவர் மேலும் தெரிவித்தார். 

பரிஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோள்களை அடைவதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கை மேற்கொண்டுள்ள விரிவான நடவடிக்கைகள் குறித்து காலநிலை மாற்ற செயலகத்தின் இயக்குநர் டொக்டர் சுனிமல் ஜெயதுங்கா (Dr. Sunimal Jayathunga), கருத்து தெரிவிக்கையில்   “இலங்கை 2017-2019 முதல் என்.டி.சி களை (NDCs) நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஆண்டு தயார்நிலை திட்டத்தை தயாரித்து செயல்படுத்தி வருகிறது. என்.டி.சி (NDCs) மறுஆய்வுக்கான ஆரம்ப ஆலோசனைகளின் மூலம், என்.டி.சி களை (NDCs) செயல்படுத்த பல இடைவெளிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவற்றில் சட்ட மற்றும் கொள்கை இடைவெளிகள், நிறுவன இடைவெளிகள், நிதி இடைவெளிகள், திறன் இடைவெளிகள், தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் ஆராய்ச்சி இடைவெளிகள் ஆகியவை அடங்குகின்றது என குறிப்பிட்டிருந்தார்.

[காலநிலை மாற்ற செயலகத்தின் இயக்குநர் டொக்டர். சுனிமல் ஜெயதுங்கா]

நிலையான அபிவிருத்தி இலக்குகளும்,  காலநிலை நடவடிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்கின்றன, மேலும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நட்பு வளர்ச்சியை அடைவதற்கான சரியான பாதையில் நாம் இருப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை நிலையான அபிவிருத்தி கவுன்சிலை அமைத்துள்ளது. டொக்டர் சுகத் யலேகம (Dr.Sugath Yalegama) நிகழ்வின்போது, இலங்கை அமைச்சரவை நிலையான அபிவிருத்தியை மையமாகக் கொண்ட ஒரு தொலைநோக்கு நோக்கிய அரசாங்கத்தின் அனைத்து அமைச்சகங்களும் செயல்படுவதை உறுதி செய்ய முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்திருந்தார். 

ஒரு நிலையான இலங்கையை நோக்கிய பொதுவான பார்வையை அடைய அனைத்து அமைச்சுக்களின் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அதே வேளையில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய நடவடிக்கை எடுப்பதில் இலங்கை முன்னேறியுள்ளது. அத்துடன் அனைத்து அமைச்சுக்களை   இணைக்கும் நிலையான அபிவிருத்தியை  அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான பார்வை மூலம், இலங்கை எஸ் .டி .ஜி க்களின் (SDGs) கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும் ”என்று டொக்டர் யலேகம குறிப்பிட்டிருந்தார். மேலும் கொள்கைகள் மற்றும் இலக்குகளை செயல்படுத்த வலுவான ஆணைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“MIND” இன் தலைமை நிர்வாக அதிகாரி, நிலையான இலங்கை 2030 தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவரும், நிகழ்வின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவருமான பேராசிரியர் முனசிங்க, ( Prof. Munasinghe) பல பங்குதாரர்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

[“MIND” இன் தலைமை நிர்வாக அதிகாரி, பேராசிரியர் முனசிங்க]

விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், முக்கிய பங்குதாரர்களை ஈடுபடுத்துவதற்கும் புதிய வழிகளைப் பயன்படுத்துவது நிலையான  அடைவதற்கு அவசியமானது. இது குறிப்பாக இளைஞர்கள், தனியார் துறை மற்றும சமூகம் போன்ற பங்குதாரர்களுக்கு பொருந்த கூடியது என்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் நாகரிகத்தை உருவாக்க தெற்காசியாவில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சியை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்  மேலும் வலியுறுத்தியிருந்தார்.

பட்டறையின் முக்கிய மையங்களில் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றின் தேவை காணப்பட்டது. அந்தவகையில் ஸ்லைகன்  அறக்கட்டளையின் (SLYCAN Trust) நிர்வாக இயக்குநரும் பிராந்திய ஆராய்ச்சி திட்டத்தின் முன்னணி ஆராய்ச்சியாளருமான திருமதி வோசிதா விஜேநாயக்க, (Ms. Vositha Wijenayake) இந்த தேவைகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய முயற்சிகளைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

[ஸ்லைகன்  அறக்கட்டளையின் (SLYCAN Trust) நிர்வாக இயக்குநர் திருமதி வோசிதா விஜேநாயக்க]

அவர் மேலும் தெரிவிக்கையில் ‘APN’ ஆல் ஆதரிக்கப்படும் பிராந்திய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இணையதளங்களிலும் (Online) அறிவு பகிர்வு நடவடிக்கைகளை நடத்துவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அத்துடன் திறன் மேம்பாடு, சட்ட மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கு உதவுதல் ஆகியவற்றில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன, இது நாட்டில் என்.டி.சி களை (NDCs) செயல்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் சட்டங்களில் உள்ள இடைவெளிகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கான அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்களை வழங்க பங்களிக்கும், என்றும் தெரிவித்திருந்தார்.

ஸ்லைகன் அறக்கட்டளை  மற்றும் பிற செயற்றிட்ட பங்காளிகள் தழுவல் மற்றும் பின்னடைவு அறிவு மையத்தை (Adaptation and Resilience Knowledge Hub) அறிமுகப்படுத்தினர், இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அறிவு தயாரிப்புகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது, இது காலநிலை அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும், தழுவல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தினால்  பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான  வளச்சியை  உருவாக்குவதற்கும் பங்களிக்கும்.

இவ் இரண்டு நாள் பட்டறையின் போது, பங்களாதேஷ் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக என்.டி.சி கள் (NDCs), எஸ்.டி.ஜி கள் (SDGs), செண்டாய் கட்டமைப்பு (Sendai Framework) மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளை (ICCCAD, Prakriti Resources Centre, IISD, UNDP, ILO, UN-Habitat, IUCN) செயல்படுத்துவது தொடர்பான அமைச்சுகளின் செயலாளர்கள், உப செயலாளர்கள் மற்றும் ஏனைய அமைப்புகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு Ms.Sajani Ranasinghe - தொலைபேசி ஊடாக 011 744 6238 அல்லது மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ள [email protected].

 

 


Related Articles

Tags

About the Author
SLYCAN Trust

Since 2016 SLYCAN is a registered legal entity in the form of a Trust, and work under the title of SLYCAN Trust, expanding the issues of focus, and widening the scope of focus from youth centric to a multi-stakeholder driven, and social justice driven process. SLYCAN Trust envisions wider engagement and a wider range of activities on the themes of sustainable development, climate change, gender and animal welfare, and social justice to ensure that we strive for a better future for all.