கல்பிட்டியாவில் சதுப்பு நிலங்கள் தொடர்பான பார்வை.

2019 டிசம்பரில், SLYCAN அறக்கட்டளை இலங்கையின் கடலோர பாதுகாப்புத் துறை, Kite Surfing Lanka , களனிய பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கை கடற்படை மற்றும் மிட்சுபிஷி கூட்டுறவுடன் (Mitsubishi Corporation) இணைந்து கல்பிட்டியாவில் 1,500 சதுப்பு நில தாவரங்களை நடவு செய்தது. ஒரு மாத கால பகுதியில் அதனுடைய வளர்ச்சி வெற்றிகரமானதாக காணப்படுவதுடன் விதி விலக்காக ஒரு சில சதுப்புநில தாவரங்களின் வளர்ச்சி வெப்பம் மற்றும் பிற குறைபாடு காரணமாக மீட்டெடுக்க முடியவில்லை.

SLYCAN அறக்கட்டளையின் நீல பசுமை பாதுகாப்பாளர்களின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக கல்பிட்டியாவில் சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பது  தொடர்பில் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் ஆனது காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை நிவர்த்தி செய்தல், அத்துடன் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்த சமூகங்களின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கும், பொருளாதார பல்வகைப்படுத்தல் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் சமூகம் திறனை வளர்ப்பதை இந்த திட்டம் இலக்காக கொண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, திட்ட நடவடிக்கைகள் அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை, சமூகம், இளைஞர்கள் மற்றும் பிரதேசத்தின் பிற தொடர்புடைய  பல பங்குதாரர்களின் கூட்டாண்மைகளை எதிர்பார்க்கிறது.

இந்த திட்டம்  தொடர்பில் SLYCAN அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திருமதி வோசிதா விஜேநாயக்க (Ms.Vositha Wijenayake) கருத்து தெரிவிக்கையில் “சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பொருத்தமான வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அடையாளம் காண்பதை மையமாக கொண்டு   இது சமூகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேம்படுத்தப்படலாம். மேலும் அடையாளம் காணப்பட்ட சில நடவடிக்கைகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வாழ்வாதார மேம்பாடு மற்றும் குழந்தை பருவ சதுப்புநில தாவர இனங்களை (Mangrove nurseries) அமைத்தல் ” போன்றவற்றையும் இலக்காக அடையாளபடுத்துகின்றது எனக் குறிப்பிட்டார்

"எங்கள் சதுப்புநில மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கம்பஹா மாவட்டத்தின் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பொருத்தமான வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை அடையாளம் காண கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை (MEPA)  மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். கல்பிட்டியாவிற்கும் இது போன்று பல பங்குதாரர்களால் இயக்கப்படும் செயல்முறையை அறிமுகப்படுத்த நம்புகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த கிழமை தை  2020 இல் , சதுப்பு நில தாவரங்களின் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பில் கல்பிட்டியாவிற்க்கு சென்ற போது “Kite Surfing Lanka” இன் உரிமையாளர் தில்சிரி வெலிகலாவுடன் (Mr. Dilsiri Welikala) பேசிய போது, ஆரம்பத்தில் இருந்தே கல்பிட்டியாவில் உள்ள சமூகம், பல ஆண்டுகளாக சுற்றுச்சூழலைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும், அவர்கள்  மிகவும் தங்கள் நிலத்தையும் நீரையும் பாதுகாக்கும் எந்தவொரு முயற்சியையும் நேர்மறையாகவும் வரவேற்கவும் செய்கிறார்கள்” என்றார்.

கல்பிட்டியாவில் அதிக சுற்றுலா செயல்முறைகளையும் பயணிகளையும் கொண்டிருந்த போதிலும் சதுப்புநில தாவரங்கள் மீது எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதில் இப்பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்றும், இப்பகுதிக்கு சுற்றுலாவின் வளர்ச்சி நிலையானது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்றும் அவர் மேலும் பகிர்ந்து கொண்டார். இந்த சிந்தனையின் விளைவாக, கல்பிட்டியா சுற்றுச்சூழல் உணர்வுள்ள சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்க முடிந்தது, அத்துடன் அவர்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக நிலைத்திருப்பு தன்மையை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளார்கள். 

"இப்பகுதியில் சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பது சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரையின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் பெறுவது மட்டுமல்லாமல், ஒரு வணிக வாய்ப்பாகவும் மாறும், இதனால் ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கும் இது ஒரு வெற்றியாகும்" என்று வெலிகலா கூறுகிறார். இப்பகுதியில் உள்ள ஹோட்டல் நிர்வாகிகள் இந்த சதுப்பு நிலங்கள் கல்வி தொடர்பான சுற்றுசூழலின் அம்சத்தையும் இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மேலும் விரிவுபடுத்துவதோடு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறார்கள்.

அடுத்த ஆறு மாதங்களில், கல்பிட்டிய பகுதியில் முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுகளுடன் SLYCAN அறக்கட்டளை கல்பிட்டியாவில் திட்ட நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் சமூக ஈடுபாட்டுடன் மேலும்  சதுப்புநில குழந்தை பருவ இன கன்றுகளை (Mangrove nursery) அமைத்தல், சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளில் சமூகத்தின் திறனை வளர்ப்பது,  வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை இணைத்தல் மற்றும் நிலையான சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவை அடங்குகின்றது.  


Related Articles

Tags

No items found.
About the Author
SLYCAN Trust

Since 2016 SLYCAN is a registered legal entity in the form of a Trust, and work under the title of SLYCAN Trust, expanding the issues of focus, and widening the scope of focus from youth centric to a multi-stakeholder driven, and social justice driven process. SLYCAN Trust envisions wider engagement and a wider range of activities on the themes of sustainable development, climate change, gender and animal welfare, and social justice to ensure that we strive for a better future for all.