திட்டத்திலிருந்து செயற்பாடு; உலக சவால்களுக்கு முகம்கொடுத்தலில்

வெற்றியை அடைவதற்கு உலக சவால்களை ,முகம்கொடுத்து அதற்கான தீர்வுகளை அபிவிருத்தி செய்து அதில் வெற்றியை அடைவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இந்த தேவையை எதிர்கொள்வதில் கால நிலை மாற்றம் தொடர்பான இளைஞர் மாநாட்டின் இரண்டாம் கட்டம் ஆளுமையை கட்டி எழுப்புதல் , சுகாதாரம் , கல்வி , சக்தி, வறுமை,சூழல்போன்ற உலக சவால்களுக்கான தீர்வினை உருவாக்குவதில் இளைஞர்கள் எவ்வாறு செயற்திறன் மிக்க வகையில் ஈடுபட முடியும் என்பது குறித்த ஆதரவு  ஆகியவை குரித்து கவனம் செலுத்தியது.

2018 காலநிலை மாற்றத்தின் உலக  இளைஞர் மாநாட்டின் முதலாம் கட்டம் “இலங்கை அடுத்து – ஒரு நீல பசுமை யுகம் “ மாநாட்டின் ஒரு பகுதியாக ஏர்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சின் கீழ் காலநிலைமாற்ற செயலகத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. சிலிகான் ட்ரஸ்ட் மற்றும் மீட்லெஸ் மண்டே ஸ்ரீலங்கா ஆகிய அமைப்புக்களும் இதில் இணைந்துள்ளன. இந்த இளைஞர் மாநாட்டின் இலக்காக ஆளுமையை கட்டி எழுப்புதல் மற்றும்  நிபுணத்துவ அபிவிருத்தி ஆகியவற்றின் ஊடாக அவர்களை மேம்படுத்தும் அதேவேளை காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை கட்டி எழுப்புதல் ,   திட்டங்களை அமுல்படுத்துவதின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்தல், இளைஞர்களை ஊக்குவித்தல்  ஆகியவை இந்த இளைஞர் மாநாட்டின் இலக்காக அமைந்திருக்கின்றன.  இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 35  இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்..

2019 ஜனவரி 29 ஆம் திகதி  இந்த செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. காலநிலை மாற்றத்தின் உலக இளைஞர் மாநாட்டின் இரண்டாம் கட்டம், திட்டத்திலிருந்து செயற்பாடு; உலக சவால்களுக்கு முகம்கொடுத்தலில்,  என்ற விடயம் தொடர்பாக கவனம் செலுத்தும் நிலையில்  தெரிவு  செய்யப்பட இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் பல பின்னணிகளை கொண்டவர்களாக காணப்பட்டிருந்தனர். அத்துடன் உலக சவால்களாக சமூகம் எதிர்கொள்ளும்,  உலக சவால்களை எதிர்கொள்வதற்கான ஆக்கபூர்வமான தீர்வுகளை அபிவிருத்தி  செய்வதற்கான சிந்தனைகளை வெளிக்காட்டியவர்களாக இந்த இளைஞர்கள் அடையாளம்காணப்பட்டிருந்தனர., இந்த செயலமர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது, வென்சர் புறொண்டியர் ஸ்ரீலங்கா மற்றும் துறூ அமைப்பின் இணை ஸ்தாபகர் ஹேமிந்த ஜெயவீர, சிலிகான் ட்ரஸ்ட்டின் நிறவேற்று பணிப்பாளர்   வொசித்தா விஜேநாயக்க ஆகியோர் வளவாளர்களாக இருந்தனர்.

முதலாம் அமர்வு ஹேமிந்த ஜெயவீரவால் நடத்தப்பட்டதுடன் இதில் ஸ்திரமான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் மீதான கவனத்தை செலுத்தும் பாரிய  பூகோள சவால்களுக்கான தீர்வுகளுக்கான துரிதமான நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. கல்வி, உணவு,சுகாதாரம், வறுமை, சக்தி,சூழல், பாதுகாப்பு,மற்றும் நீர் ஆகிய 6 பாரிய சவால்கள் குறித்து ஜெயவீர அறிமுகம் செய்திருந்தார்.

‘’ காலநிலை மாற்றம் போன்ற உலக சவால்களதிகரித்துவரும் நிலையில் அதனை எதிர்கொண்டு ஸ்திரமான நிலையை தக்கவைப்பதர்கான தீர்வுகளை   அடையாளம் கான்பதற்கான முயர்சிகள் உலகுக்கு தேவையாக உள்ளது.  அத்துடன்  துரிதமான முன்மாதிரி  திட்டங்களை செய்வதற்கான சிறந்த வழியாகும். வெற்றிகரமான தீர்வுகளை பெறுவதற்கு  குழுவில் பன்முகதன்மை எமக்கு தேவையாக உள்ளது”என அவர் தெரிவித்தார்.

26 நிமிட முன்  மாதிரி திட்டங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டவை மூலம்,  உலக சவால்கள் குறித்த தீர்வுகளை உருவாக்குவதற்காக குழு  செயற்பாடுகளில் இதில் கலந்துகொண்டவர்கள் ஈடுபட்டனர். அதன் பின்னர் உள்ளீடுகளை பெறுவதற்காகவும் மீளமைப்பதற்காகவும் தீர்வுகள் முன்மொழியப்பட்டிருந்தன.

சிலிகான் ட்ரஸ்ட் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் கியூமானே சொசைட்டி இன்டர்ன்நசனல் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பனிப்பாளருமான வொசிதா விஜேநாயக்கா பயிற்சியமர்வின் இரண்டாவது  அமர்வை நடத்தினார்.

இதில் எவ்வாறு திட்ட முன்மொழிவு ஒன்றினை உருவாக்குவது என்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. ஓவ்வொரு இளைஞரும் தமது சொந்த திட்ட முன்மொழிவுகளை உருவாக்குவதற்கான ஆளுமையை வழங்கும் இலக்குடன் இந்த அமர்வு நடத்தப்பட்டது. உலக சவால்களை எதிர்கொலவதற்கான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான நிதியினை சேகரிப்பதற்கு இது உதவும்.

அத்துடன் காலநிலை மாற்றம் மீதான தேசிய தொடர்பாடல் தந்திரோபாயத்தில் காலநிலை மாற்ற தொடர்பு முயற்சிகளில் இளைஞர்களின் வகிபாகத்தை சுட்டிக்காட்டி இளைஞர்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பத்தை இந்த செயலமர்வு வழங்கியது.  அத்துடன் இலங்கையில் காலநிலை மாற்ற தாக்கங்கள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வதிலும்  தொடர்புகளை பேணுவதிலும் உள்ள சவால்கள் மற்றும் இடைவெளிகள் குறித்து அடையாளம்காணவும் சந்தர்ப்பம் காணப்பட்டது,

இந்த செயலமர்வின் இரன்டாம் கட்டம் 2019 பெப்ரவரி 9 ஆம் திகதி நடத்தப்படும்.

Related Articles

Tags

About the Author
SLYCAN Trust

Since 2016 SLYCAN is a registered legal entity in the form of a Trust, and work under the title of SLYCAN Trust, expanding the issues of focus, and widening the scope of focus from youth centric to a multi-stakeholder driven, and social justice driven process. SLYCAN Trust envisions wider engagement and a wider range of activities on the themes of sustainable development, climate change, gender and animal welfare, and social justice to ensure that we strive for a better future for all.